• Jul 25 2025

புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நடந்த சோகம்…இவருக்கு இப்படியொரு நிலைமையா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியின் கமல் வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் பலருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அதில் ஒருவர் தான் தாமரை, கூத்து நடத்தி தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்த ஒரு பெண் ஆவார்.

குடும்ப கஷ்டத்தால் சிறுவயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்த இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளவருடன் திருமணம் நடந்தது, பின் அதில் பிரச்சனை ஏற்பட அவருடன் குழந்தை பெற்று விவாகரத்தும் பெற்றார்.

இப்போது மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் தாமரைக்கு பிக்பாஸ் பிறகு நிறைய சீரியல்கள் வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது.

குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் தாமரை பெற்றோருக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

அதில் என்னுடைய பங்கு மட்டும் இல்லாமல் பலரது உதவிகளும் அடங்கியுள்ளது என்று கூறியிருந்தார்.புது வீட்டிற்கு செல்வதற்குள் தாமரை தந்தை கடந்த மே 31ம் தேதி உயிரிழந்துள்ளார். அப்பாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தாமரை ஷேர் செய்துள்ளார்.


Advertisement

Advertisement