• Jul 25 2025

அர்ஜுன் பற்றி கோதைக்குத் தெரிய வந்த உண்மை... ராகினி எடுக்கும் முடிவு என்ன..? பரபரப்பான திருப்பங்களுடன் 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். மற்ற சீரியல்களைப் போலவே இந்த சீரியலும் பரபரப்பான திருப்பங்களுடன் அட்டகாசமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கோதை நடேசனிடம் "அப்போ அந்த அர்ஜுன் நல்லவனாக நடிச்சு இத்தனை நாளாக நம்மள ஏமாற்றி இருக்கின்றான், அர்ஜுன் தான் ஏதோ திட்டம் போட்டு தமிழை மாட்டி விட்டிருக்கான், அர்ஜுன் கெட்டவன், அவன் மேல தான் தப்பிருக்கு என்று இப்போ நான் முழுசா நான் நம்புறேன்" என்கிறார்.


மேலும் "இத்தனை நாளாக நீங்க முயற்சி செய்தீங்க, இப்போ நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன், அவன் மாட்டியிருக்கிற முகமூடியைக் கழட்டி இருக்கிறேன்" எனவும் கூறி சபதமெடுக்கின்றார் கோதை.

இவ்வாறாக அதிரடித் திருப்பத்துடன் இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement