• Jul 23 2025

தனுஷ் படப் பாடலுக்கு தாறுமாறாக குத்தாட்டம் போட்ட ஜனனி... வைரலாகும் வீடியோ.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகியது. இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக கமல்ஹாசனே இருந்து வருகின்றார். 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது பாதி கட்டத்தை தாண்டியுள்ளது.


தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். கடந்த வாரம் குயின்சி இந்த வீட்டிலிருந்து வெளியேறினார். எனவே இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். யார் வெளியேறுவார்கள் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரையில் அங்கு காலையில் வேர்க் அப் ஷாங் ஒளிபரப்பு செய்யப்படுவது வழமை. அதற்கு போட்டியாளர்கள் பலரும் எழுந்து சென்று ஆடுவார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள பாடலிலே தனுஷின் உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே நடனம் ஆடுகின்றார்கள்.


ஆனால் அதில் ஜனனியின் நடனமானது பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதனால் அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement