• Jul 25 2025

நயன்-விக்கி தம்பதியினரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... அப்போ ராஜ வாழ்க்கை தான் போல..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. தன்னுடைய சினிமாப் பயணத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் தன்னுடைய நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை இந்த ஆண்டில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து, தற்போது இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்.


மேலும் தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் நயன்தாரா தான் திகழ்கிறார். குறிப்பாக பாலிவுட்டில் கூட தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில பிரபல நடிகைகள் மட்டுமே இத்தகைய சம்பளத்தை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நயன்தாராவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாள 165 கோடி ரூபாய் என வணிக செய்தி நிறுவனங்கள் சமீபத்தில் கணக்கிட்டுள்ளன.

அந்தவகையில் ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் 2 சொகுசு பங்களாக்களும், சென்னையில் 4 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளும் நயன்தாராவுக்கு சொந்தமாக உள்ளது எனக் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது நயன்தாராவுக்கு தனியாக ஒரு பிரைவேட் ஜெட்டும் உள்ளது.


அத்தோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நயன்-விக்கி தம்பதியினரின் ஒட்டு மொத்த சொத்து விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது நயன்தாராவின் 165 கோடி சொத்துடன் விக்னேஷ் சிவன் சொத்தையும் சேர்த்தால் மொத்த சொத்து 215 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர்களாக இருவரும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement