• Jul 25 2025

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகவுள்ள இளம் நடிகை- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.இந்த சீரியல் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகும் ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகின்றது.

கணவனால் ஏமாற்றப்பட்ட பெண் தனது குடும்பத்தை எப்படி கவனிக்கிறாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் இப்போது தமிழில் காலணி தேர்தல் வருகிறது, அதில் பாக்கியா நிற்க முடிவு செய்ததும் போட்டிக்கு கோபி ராதிகாவை நிற்க வைக்கிறார்.


அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை, இந்த தேர்தல் காட்சிகள் மட்டும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.இந்த தொடரில் எழில் காதலி அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இவருக்கு வினு என்பவருடன் தான் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் ஹனிமூனிற்காக மாலைத்தீவு சென்ற புகைப்படத்தையும் ரித்திகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

தற்போது என்னவென்றால் நடிகை ரித்திகா திருமணத்திற்கு பின் நடிப்பை நிறுத்த முடிவு செய்து பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.ஆனால் உண்மை தகவல் என்ன என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement