• Jul 24 2025

துணிவு படத்தின் இடைவேளையில் வாரிசு படத்தின் தீ தளபதி பாடல்- பிரபல தியேட்டரில் நடந்த சம்பவம்- கொந்தளித்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


துணிவு - வாரிசு படம் ரிலீசாகி உள்ளதால் கடந்த இரு தினங்களாகவே தமிழ் சினிமா பரபரப்பாக இயங்கி வருகிறது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் துணிவு படத்துக்கு 1 மணி காட்சியும், வாரிசு படத்துக்கு 4 மணி காட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்படி இருந்தும் இருதரப்பு ரசிகர்களும் நேற்று சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

இப்படங்கள் வெளியாகி ரிகர்களிடையே பாசிடிவ் விமர்சனங்களையும் நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.


இந்நிலையில் நேற்று காரைக்குடி திரையரங்கில் துணிவு திரைப்படம் வெளியாகும் போது இடைவேளையில் விஜய்யின் ’தீ தளபதி’ பாடலை போட்டுள்ளனர்.இதை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜய்யின் பாடலை மாற்ற சொல்லி கூச்சலிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இது தெரியாமல் நடந்த தவறு என தியேட்டர் விளக்கம் கொடுத்து இருக்கிறது.மேலும் இப்படங்கள் இரண்டுமே வசூலிலும் கிட்டத்தட்ட சம அளவில் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement