• Jul 24 2025

புறப்பட ரெடியான அபி... வெற்றி சொன்ன வார்த்தை... இனிமேல் என் பக்கம் வராதே என்ற மனைவி... 'Thendral Vanthu Ennai Thodum' Promo Video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் அபியும், வெற்றியும் ஒருவர் மேல் ஒருவர் மாறி மாறித் தண்ணீர் ஊற்றிக் கொள்கின்றனர். பின்னர் அபி ஊருக்கு கிளம்புவதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார். அப்போ அபியிடம் வெற்றி "முக்கியமான ஒன்றை விட்டிற்றாய்" எனக் கூறுகின்றார்.


பதிலுக்கு அபி "உன் இதயத்தை விட்டிற்றுப் போறேன்னு அறுந்த பழைய டயலாக் எல்லாம் சொல்லாதே" என்கிறார். அதற்கு வெற்றி "ஏய் பயித்தியம் உன் வேலட் ஐ அங்கயே விட்டிற்றாய்" எனக் காட்டுகின்றார்.


மேலும் அப்பாவோட வார்த்தையை தட்டாமல் திருவிழாவிற்கு வந்ததற்கு ரொம்பத் தாங்க்ஸ் எனவும் அபியிடம் கூறுகின்றார் வெற்றி. பதிலுக்கு அபி "அதை எல்லாம் நீயே வச்சுக்கொள், இனிமேல் என் பக்கம் வரவே வராதே, அதுதான் நீ எனக்கு செய்ற பெரிய உதவி" என்கிறார். 


அதற்கு வெற்றி "நீ என்ன சொன்னாலும் உன் காலை சுத்துற நாலு காலு பிராணியை திரும்ப திரும்ப உன் காலை சுற்றி வந்து மன்னிப்பு கேட்டிற்றுத்தான் இருப்பேன்" என்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement