• Jul 24 2025

நடந்தது எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே வைச்சிருக்க ஒரு காரணம் இருக்கு- ரச்சிதா வெளியிட்ட சோகமான பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ரச்சிதா. இதனை அடுத்து சரவணன்-மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்ததை அடுத்தே சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக மாறினார்.

அதன்பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்தார்.அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஓரளவிற்கு மக்களின் ஆதரவை பெற்றார்.கடந்த சில வருடங்களாகவே ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் இருவரும் பிரிந்திருக்கிறார்கள்,


 அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துள்ள அவர்கள் இணைந்துவிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் ரச்சிதா கடந்த சில தினங்களுக்கு முன் கணவர் மோசமாக மெசேஜ் செய்கிறார் என போலீஸில் புகார் கொடுத்த தினேஷ் விவாகரத்து பெற்றுக்கொள் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.


இந்த நிலையில் ரச்சிதா Black & Whiteல் ஒரு புகைப்படம் வெளியிட்டு, தான் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது என்றும் தனக்கு நேர்ந்த விஷயங்களில் இருந்து பாடங்கள் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement