• Jul 24 2025

லியோ ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகிய வீடியோ- மாஸாக கையசைத்துக் கொண்டு வரும் தளபதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்திற்காக அவர் பாடிய நா ரெடி என்கிற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. 

அனிரூத் இசையில் அவர் பாடிய இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மறுபுறம் இதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் ஆந்திராவின் Talakona என்ற இடத்தில் தொடங்கி இருக்கிறார்கள்.


விஜய் பட ஷூட்டிங் நடக்கிறது என தெரிந்து அதிக அளவில் கூட்டம் அங்கே குவிந்து இருக்கிறது. அவர்களை பார்த்து விஜய் கையசைத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

மேலும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement