• Jul 25 2025

படுப்பதற்கு கட்டிலோ அல்லது சமைப்பதற்கு பாத்திரங்களோ கிடையாது- பேட்டியில் கலங்கிய முனிஷ் ராஜா,மற்றும் ராஜ்கிரண் மகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தார்.இது தவிர  கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார்.

 இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு முனீஸ் ராஜா மற்றும் பிரியா வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் மறுப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர்.


இந்நிலையில் இருவீட்டாரும் ஒரு சமயத்தில் சம்மதம் தெரிவித்த நிலையில் ராஜ்கிரனின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இந்நிலையில் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்து விட்டனராம். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர் .


இப்படி இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்தது வைரலாகிய நிலையில் ராஜ்கிரண் இந்த விஷயத்தை பற்றி தெளிவான விளக்கம் கூறியிருந்தார் அதில் “பிரியா என்னுடைய மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான் அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை செய்திருகிறார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அதில் விளக்கமாக கூறியிருந்தார்.


ஆனால் இப்படி ராஜ்கிரன் கூறிய பதிவு இவர்களின் வாழ்க்கையை மிகப்பெரிய சர்ச்சையாகவே மாறி உள்ளதாக கூறினார்கள். அதாவது முனீஸ் ராஜாவின் தாய் சர்க்கரை வியாதி உள்ளவர் என்பதால் அவர் தொடர்ந்து இன்சுலின் எடுத்துக் கொள்ளாமல் அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் கஷ்டமான நிலையாக இருந்தது எனவும், ராஜ்கிரணுக்கு என் மீது அவ்வளவு கோபத்தில் இருந்தால் என்னை கூப்பிட்டு அடித்து இருந்திருக்கலாம் என்றும் முனீஸ் ராஜா  ஓர் பேட்டியில்  கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

என்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் நான் எந்த சூழ் நிலையிலும் பிரியாவை விட்டுக்கொடுக்க மாட்டேன். பிரியா வீட்டை விட்டு வெளியில் வரும் போது ஒரு அறை எடுத்து தங்கி வந்தார். அங்கே படுப்பதற்கு கட்டிலோ அல்லது சமைப்பதற்கு பத்திரங்களோ கிடையாது. ஆனால் ராஜ்கிரணின் வீட்டில் இருந்திருந்தால் அவர் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் பிரியா என்னை நம்பி வந்துவிட்டார். தற்போது நான் அவருக்காக ஒரு வீடும் தொழிலும் ஏற்பாடு செய்து வருகிறேன் என்றும் இன்னும் பல விடயங்களைக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement