• Jul 25 2025

தமிழ்நாட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிம்பு... காரணம் என்னவாக இருக்கும்?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு ஒரு நிகழ்வின் போது தமிழ்நாட்டு முதல்வருக்கு நன்றியை தெரிவித்திருந்தார். சிம்புவின் அப்பாவை தெரியாதவர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது.


டி.ஆர் எனப்படும் டி. ராஜேந்தர் அடுக்கு மொழி வார்த்தைகளைக் கூறி அசத்தும் மன்னன். இவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவருக்கு ரசிகர்கள் கோடாகோடி பேர் இருக்கின்றனர். 


சமீபத்தில் டி. ராஜேந்தர் உடல்நிலை சரியில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த செய்தியை கேட்டு அவரின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர். இது பற்றி அவருடைய மூத்த மகனான சிலம்பரசன் தகவல்களை அறிவித்திருந்தார். 


அவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு இருந்த போது தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் டி. ஆர் அவர்களை அருகில் இருந்து பார்த்துக்கொண்டார்களாம். 


இதற்கான நன்றியை சிம்பு ஒரு நிகழ்வின் போது அவர்களுக்கு கூறியிருந்தார். மேலும் கிருத்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். கிருத்திகாவுடன் இணைந்து சிம்பு படம் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.


Advertisement

Advertisement