• Jul 23 2025

சிவாங்கிக்கு பதிலா என்னை துரத்திட்டாங்க; நடந்தது இதுதான் உண்மையை உடைத்த கிசோர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் குக்வித்கோமாளி.இந்த ஷோவில் கலந்து கொண்ட அஸ்வின், தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, பவித்ரா என அனைவரும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்து வருகின்றார்கள்.மேலும் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஜனவரி மாதம் 28ம் தேதி ஆரம்பமாகியது.

குக்குளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் உள்ளனர். முதன் முறையாக சிவாங்கி, குக்காக மாறி அசத்தி வருகிறார்.


இதில் காளை,ஷெரின்,கிஷோர் ஆகியோர் எலிமினேட் லிஸ்டில் இருந்த நிலையில், காளையன் மற்றும் ஷெரின் காப்பாற்றப்பட்ட நிலையில், கிஷோர் முதல் நபராக எலிமினேட் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறியதை அடுத்து, இணையத்தில், சிவாங்கிக்கு பதிலா என்னை துரத்திட்டாங்க என்றும், குக் வித் கோமாளியை கழுவி ஊற்றிய கிஷோர் என்றும் செய்திகள் வெளிவந்தன.


இந்த செய்திகளால் கடுப்பான கிஷோர் எல்லாமே தப்பான செய்தி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரொம்ப ஆர்வமாக காத்துக் கொண்டு இருந்தேன். எனக்கு சமையல் பெருசா தெரியாது, இருந்தாலும், சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், ஓரளவுக்கு வரும் சமையலை வைத்து இந்த நிகழ்ச்சியில் சமாளிப்பது கஷ்டம் என்பதை தெரிந்து கொண்டேன். உண்மையில் அந்த செட்டை நான் மிஸ் பண்ணுவேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது சிவாங்கி என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement