• Jul 26 2025

என்னிடம் தவறாக நடந்துகிட்டாங்க, நான் பார்த்ததும் ஓடிட்டாரு- சிறுவயதிலேயே கொடுமைகளை அனுபவித்த காதல் பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சரண்யா. இவர் இதனைத் தொடர்ந்து பேராண்மை, ரெட்ட வாலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பின்னர் படவாய்ப்பில்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் இவர் கூறிய விடயம் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக இவர் பல படங்களில் நடித்துள்ளதாகவும், அப்போதிலிருந்தே இவருக்கு பாலியல் தொல்லைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார் . 


மேலும் தான் சினிமா துறையில் இருப்பதாலும், தன்னிடம் பெரிய அளவில் பணம் இல்லாததாலும், தன்னுடன் தாய், தந்தை என யாரும் உடன் இல்லாததால், கேட்ட யாரும் இல்லை என்ற எண்ணத்தினாலும், பல சமயம் ஆண்கள் தன்னிடம் அட்வான்டேஜ் எடுக்கவே முயற்சித்தனர் என்று தெரிவித்துள்ளார். 

இதனால் தான் உதவி கேட்கவே பயப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்ததால், எப்படி அந்த சூழ்நிலைகளை கையாள்வது என தெரியாமல் இருந்தேன் என்றும் சரண்யா நாக் கூறியுள்ளார்.சிறு வயதில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு நபரை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். 


அப்போது அந்த நபர் இவரை பார்த்ததும் பயந்து, பதட்டமாகி, ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். என் மீது எந்த தவறும் இல்லாததால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்க முடிந்தது. ஆனால் அந்த நபரால் அங்கு இருக்கவே முடியவில்லை, பயந்து ஓடிவிட்டார் என சரண்யா தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன், இனி எந்த பயமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement