• Jul 25 2025

நல்லா இருக்கார் என்று சொன்னாங்க.. அவன் நம்மள விட்டு போய்ட்டான்... ஹரிவைரவனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அப்புக்குட்டி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, குள்ள நரிக் கூட்டம்' ஆகிய திரைப்படங்களில் காமெடியனாகவும் துணை நடிகராகவும் நடித்திருப்பவர் தான் நடிகர் ஹரிவைரவன்.

மதுரையைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் அப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் அப்புக்குட்டி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதாவது "வெண்ணிலா கபடிக் குழு வைரவன் இன்று எங்க கூட இல்லை, இப்படம் நாங்க எல்லாரும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில நாங்க நடிச்சோம், நினைச்ச மாதிரியே நம்ம எல்லாருக்கும் நல்ல பேர் கிடைச்சது.

இன்னும் அதிகமாக ஜெயிப்போம் என யோசிச்சிட்டு இருந்த ஒருத்தர் இன்றைக்கு நம்மள விட்டு போய்ட்டார்" என்பதை நினைக்கும் போது ரொம்பவே வருத்தமாக இருக்கு.


அதேபோல குள்ளநரி கூட்டம் படத்தில் அவர் கூட வேர்க் பண்ணினதை மறக்கவே முடியாது. வைரவனோட அன்பு மறக்கவே முடியாது. எதுவாக இருந்தாலும் அவன் விளையாட்டுத் தனத்தோட இருப்பான், கோபம் வந்தால் கோபத்தை நேரடியாகவே காட்டுவான், அப்படியான ஒரு நண்பர்.


ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட அவங்க வீட்டில பேசி இருந்தேன் "நல்லா இருக்காரா என்று, அதற்கு அவங்களும் சொன்னாங்க நடக்க மட்டும் தான் முடியாது ஆனால் ரொம்பத் தெம்பாக இருக்கார் என்று. நானும் கண்டிப்பா அவர் திரும்பி வந்திடுவார் என்று நினச்சேன், ஆனால் அதையும் மீறி இறைவன் அவரை நம்ம கூட இருக்க வைக்கல. அவரோட ஆத்மா சாந்தியடையட்டும்" எனக் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement