• Jul 25 2025

நான் சூர்யா மாதிரி இருக்கேனு சொன்னாங்க" Ex லவ்வர் இதனால் தான் பிரேக் அப் ஆச்சு- முதல் முறையாக காதல் கதையை கூறிய விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது 100 நாட்களைக் கடந்து அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.தற்போது ஐந்து போட்டியாளர்கள் Finale வரை முன்னேறி உள்ளனர்.

 இன்னும் ஒரு சில தினங்கள் இருப்பதாக தெரியும் நிலையில், யார் இந்த முறை வெற்றி பெறுவார் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். அதேபோல வெற்றி பெறும் நபர் யார் என்பதை கணித்தும் பலவிதமான கருத்துகளையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.


இந்த நிலையில், தனது காதல் காலங்கள் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை மகேஸ்வரியிடம் விக்ரமன் பகிர்ந்து கொண்டார். ஆர்குட் சமயத்தில் தான் காதலித்தது பற்றி மகேஸ்வரிடம் பகிர்ந்து கொண்ட விக்ரமன், "ஆர்குட் மூலமா அந்த பொண்ணோட பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம். 

காலேஜ்ல இருந்து எலக்சன் அதுஇதுன்னு சொல்லிட்டு இருந்ததால கொஞ்சம் சீரியஸா போய்ட்டு இருந்தது" என விக்ரமன் கூறவே குறுக்கே பேசும் மகேஸ்வரி, "அந்த சமயத்தில் கொள்கை பேசிக் கொண்டிருந்தீர்களா அல்லது ரொமான்டிக்காக காதல் செய்தீர்களா" என்றும் கேட்கிறார்."ரொமான்ஸ் எல்லாம் எனக்கு தெரியாதுங்க" என்றும் விக்ரமன் கூறி தொடர்ந்து பேசுகையில், "அந்த சமயத்தில் போனில் ரீசார்ஜ் செய்து தினமும் மணிக்கணக்கில் பேசுவோம்.


 மறுநாள் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் சில நேரம் தூங்குவோம். ஸ்பெஷல் டியூஷன் எடுத்து என் பிறந்தநாளுக்கு வாட்ச் ஒண்ணு அவங்க பரிசா கொடுத்தாங்க. நானும் கொஞ்சம் பணம் சேர்த்து வாட்ச் வாங்கி கொடுத்தேன். அத மாதிரி  அவங்க வந்து சொல்லிட்டே இருப்பாங்க நீ வந்து சூர்யா மாதிரி இருக்க அப்படின்னு. அப்போ சொல்லுவாங்க. அவங்க பார்வையில் அப்படி தெரிஞ்சிருக்கு. என்ன அப்படி சொல்லாத, யார் கூடயும் கம்பேர் பண்ணாதன்னு சொல்லிட்டே இருப்பேன்" என கூறினார்.

அதன் பின்னர், வெளியே திரைப்படங்கள் பார்க்கவும், வேறு சில இடங்களில் ஜோடியாக சென்றது பற்றியும் பேசிய விக்ரமன், வேலை உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பிரிய நேர்ந்ததாகவும் கூறி இருந்தார். நியாயம், கொள்கை, சமூக நீதி உள்ளிட்ட பல விஷயங்களை தொடர்ந்து பேசி வரும் விக்ரமனின் காதல் கதையும் தற்போது பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.



Advertisement

Advertisement