• Jul 25 2025

இதை பண்றேன் என்று ஏன் சீப்பா சொல்றீங்க ஈஸியா எல்லாம் விட்டுத் தர முடியாது- விமர்சனம் தெரிவித்த ப்ரியா பவானி சங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதன் பின்னர், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ப்ரியா, பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். மேலும் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.


சமீபத்தில் யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில், சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ளார். இது போக நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.


இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கரின் தற்போதைய பதிவு ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது. தன்னை பற்றி வலம் வரும் சில கருத்துக்களை கவனித்த ப்ரயா பவானி சங்கர், இது பற்றி தனது அறிக்கையில், "நான் சொன்னேன்னு சில செய்தி பரவிட்டு இருக்கு. நான் இதுக்கு ரியாக்ட் பண்ண வேணாம்ன்னு நினைச்சேன் ஆனா இதுக்கு மேல சரிப்பட்டு வராது. நான் அத சொல்லல, அப்படி சொல்லி இருந்தா கூட என்ன?. ஆமா நான் காசுக்காக தான் நடிக்கிறேன். நான் பொதுவா தான் கேட்கிறேன், நீங்க யாரும் காசுக்காக உழைக்கலயா?. பணத்துக்காக உழைக்கிறேன்னு சொல்றத பத்தி சீப்பா சொல்றீங்க..

நான் கஷ்டப்பட்டு கடின உழைப்பு எல்லாம் பண்ணி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். ரொம்ப ஈஸியா எல்லாம் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது" என தனது அறிக்கையில் ப்ரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார் 

Advertisement

Advertisement