• Jul 24 2025

''அவங்கள உயிரோட பிணம் ஆக்கிட்டாங்க''.....மறைந்த சீரியல் நடிகை சித்ரா குறித்து உருக்கமாக பேசிய நடிகை தேவிபிரியா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியலில் ஹீரோயின், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து தனக்கான இடத்தை தந்திரமாக பிடித்துக் கொண்டவர் நடிகை தேவிபிரியா.

இவர் நடிப்பதையும் தவிர டப்பிங் ஆர்டிஸ்ட் ராவ் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவர் வெள்ளித்திரையில் பல நடிகைகளுக்கு டப்பிங் செய்து உள்ளார் அந்த வகையில் சீமராஜா படத்தில் சிம்ரனுக்கு டப்பிங் கொடுத்தார் மேலும் புதுப்பேட்டை படத்தில் சினேகாவும்,  தரமணி படத்தில் நதியாகவும் டைப்பிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தொலைக்காட்சிகளில் நடன போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தேவிபிரியா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் .அந்தவகையில் அந்த பேட்டியில் '' சின்னத்திரை நட்சத்திரங்களில் நடிகை சித்திரா சடன் சூசைட் பண்ணும் போது உங்களுக்கு எந்தளவிற்கு மன கஷ்டம் இருந்திச்சு?என்ற கேள்விக்கு '' இந்த சூசைட்டில் சுயநலம் இருக்கு, என்னனென்னா என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டுட்டு போயிடுவாங்க,ஆனா அவங்கள சார்ந்தவங்க அனுபவிக்கிற கொடும ,அதாவது மத்தவங்க பேசுற பேச்சுக்களை காது குடுத்து கேக்கேலாது.

அவளிண்ட வாழ்க்கையில என்ன நடந்ததெண்டு இன்னமும் யாருக்கும் தெரியாது ,அவள் பயணித்து வந்த கஸ்டங்கள் அதுவும் யாருக்கும் தெரியாது.அவள் இல்லை என்றொன்ன அவங்க அவங்க இஸ்டத்துக்கு கதை விடுறது,கெட்ட பேர உண்டாக்குறதில என்ன பிரியோசனம் இருக்கு? அவளின் டெத் ராஜ மரியாதையோட நடந்திச்சு . அவளுடைய அப்பா,அம்மவா பேச்சுக்களால் குத்தி குத்தி உயிரோட பிணமாக்கி வைச்சிட்டாங்க.என்று கூறினார்.

Advertisement

Advertisement