• Jul 25 2025

இப்படித்தான் ஆரம்பிப்பார்!! வைரமுத்துடன் பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்!! கடுமையாக எச்சரித்த பாடகி சின்மயி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சின்மயி. இவர் பாடகியாக மட்டுமல்லாது டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.இது தவிரு முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் ஆட்டிஸ்டாகவும் இருக்கின்றார்.

மேலும் பிரபல நடிகரைத் திருமணம் செய்திருக்கும் இவருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தது. இதனையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அத்தோடு திருமணத்திற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்துவை குருவாக பாவித்து வந்த சின்மயி, அதன்பின் தன்னிடம் பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.


இன்றுவரை பல பெண்கள் வைரமுத்து பற்றிய உண்மையை கூறி வருகிறார்கள் என்று சின்மயி விமர்சனம் செய்தும் வருகிறார். அப்படி சமீபத்தில் சீரியல் நடிகை அர்ச்சனா வைரமுத்துவை பார்த்து ஆசிப்பெற்று புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த சின்மயி ஒரு ஷாக்கிங் பதிவினையும் பகிர்ந்து எச்சரித்துள்ளார். அதில், ஆரம்பத்தில் இப்படித்தான் துவங்கும், தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள் தள்ளியே இருங்கள். யாரையாவது உடன் அழைத்துச்செல்லுங்கள் என்று கருத்தினை பகிர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement