• Jul 24 2025

நான் இப்படித்தான் தளபதியின் ரசிகை ஆனேன்-ஃபிளாஸ் பேக் கதையை சொன்ன நடிகை ராஷ்மிகா மந்தனா- குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் நிலையில், இதில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி, ஏகப்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

குறிப்பாக நடிகர் விஜய் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், என்ன பேசுவார் என்பதை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளனர்.


வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ராஷ்மிகாவும், சிறு வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகை தான். இவர் முன்னணி நடிகையாக வளர்ந்த பின்னர், விஜய்யுடன் எப்போது ஜோடியாக நடிப்பீர்களா என கேட்டால் கூட, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தவற விட மாட்டேன் என கூறி வந்தார். அதே போல் 'மாஸ்டர்' படத்தில், ராஷ்மிகா தான் ஹீரோயின் என வதந்தி வந்த போது, இந்த தகவல் உண்மையாக இருந்தால், நான் தான் ரொம்ப சந்தோஷ பட்டிருப்பேன் ஆனால் இதில் உண்மை இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இவரின் கனவை நனவாகியுள்ளது, 'வாரிசு' திரைப்படம்.வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய்க்கு எப்படி ரசிகையாக மாறினேன் என்பது குறித்து ஃபிளாஷ் பேக் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா கூறியுள்ளதாவது, "நான் சிறு வயதில் என் தந்தையுடன் கில்லி FDFS பார்க்க சென்றேன்... படத்தைப் பார்த்த பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, நான் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் என கூறியுள்ளார் இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement