• Jul 23 2025

பீஸ்ட் படத்தின் நெக்கடிவ் விமர்சனங்களை இப்படித்தான் நெல்சன் எதிர் கொண்டார்- கவின் கூறிய சீக்ரெட் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கவினின் டாடா திரைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது. அப்படி ஒரு விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் ஒரு திரைப்படமாகும். இந்த படம்  கடந்த 10ம் திகதி திரைக்கு வந்தது. கவின் மற்றும் அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கர், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


 மேலும் கவினின் மகனாக நடித்தது பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பார்த்த பிரபலங்கள் பலரும் கவினுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும் என சமூக வலைதளங்களில் படத்தை புகழ்ந்து பதிவிட்டுவருகின்றனர். 


நடிகர் கவின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருந்தார். இந்த நிலையில் டாடா படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேட்டி ஒன்றில் கவின், இயக்குநர் நெல்சன் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வார் என்று பேசியது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 


அதில் ஒருமுறை விஜய் டெலி அவார்ட்ஸ் வாங்கிவிட்டு என் முதல் விருது என பெருமையுடன் இயக்குநர் நெல்சனிடம் சொன்னேன். சரி வாடா அடுத்த வேலையைப் பார்ப்போம் என்றார். அதேபோல என் முதல் படம் வெளியாக தாமதமானபோது வாடா அடுத்த வேலையைப் பார்ப்போம் என்றார். அவர் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வார். அவரைப்போல வெற்றி தோல்வியை ஒரே மாதிரி எடுத்துக்கொண்டால் நம்முடைய மனநிலை எந்த குழப்பமும் அடையாமல் இருக்கும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன் என்றார்.

Advertisement

Advertisement