• Jul 25 2025

ராம் சரணின் மனைவி கர்ப்பமானது இப்படித்தானாம்... வெளியான தகவல்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து பல வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்தத் தம்பதியினருக்கு 11-ஆண்டுகள் கழித்து இன்றைய தினம் பெண் குழந்தை பிறந்தது.


இதனைத் தொடர்ந்து உபாசானா கர்ப்பமானது எப்படி? கரு முட்டையை எப்படி பாதுகாத்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது வெளிநாடுகளில் 20 வயதாகும் பெண்கள் தங்கள் கருமுட்டையை இன்சூரன்ஸ் செய்து வைப்பது போல ஃப்ரீஸ் செய்து பாதுகாத்து வைத்து வருவதை பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து வைத்திருந்திருக்கின்றார் உபாசனா.


இதனால் சினிமாவில் தனது கணவர் ராம் சரணும், தனது துறையில் தானும் சாதித்த பின்னர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் உபாசனா. கணவர் ராம் சரணும் மனைவியின் கருத்தை மதித்து கருமுட்டையை பாதுகாத்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து ராம் சரணின் மனைவியும் இந்த முறையை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா இருவருமே லைஃப்பில் தற்போது செட்டில் ஆகி விட்டதாகவும் இனிமேல் குழந்தையை வளர்க்க ரெடியான மன நிலைக்கு இருவரும் வந்த நிலையில் தான் கடந்த ஆண்டு உபாசனா கர்ப்பம் அடைந்துள்ளார். 

உபாசனா எடுத்த இந்த முடிவுக்கு ராம் சரண் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement