• Jul 24 2025

செவ்வந்தி சீரியலில் இணைந்த மற்றுமோர் பிரபலம்... அட இவரா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் 'செவ்வந்தி'. இந்த சீரியலானது ஜூலை 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் திவ்யா ஸ்ரீதர் மற்றும் நிதின் கிரிஷ் ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது இவர்களுடன் வினோத், பிரியங்கா, எஸ்.கே.சிவன்யா, அழகு, ஜெயந்தி நாராயணன், பிரேமி, ஆண்ட்ரூ ஜேசுதாஸ், ஸ்ரீவித்யா சங்கர், விஜய் கிருஷ்ணராஜ், ஜெயராமன், மோகன், நீபா, திவ்யதர்ஷினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 


மேலும் இந்தத் தொடரை ஓ.என்.ரத்தினம் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். செவ்வந்தி சீரியல் தெலுங்கில் ‘கீதாஞ்சலி’ என்றும் மலையாளத்தில் ‘சீதாராமம்’ என்றும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணைந்திருக்கின்றார். அதாவது மானாட மயிலாட ப்ரேம் டான்சர் ஆகிய நடிகர் மானஸ் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 


Advertisement

Advertisement