• Jul 25 2025

என்னோட வீக்னெஸ் இது தான்- நடிகர் ஜுவாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ஜுவா.இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி.சௌத்ரியின் மகன் என்பதோடு நடிகர் ஜித்தன் ரமேஷின் சகோதரனும் ஆவார்.

அதனால் முதல் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு மிக எளிதாக கிடைத்துவிட்டது என்றாலும்,தொடர்ந்து தனது திறமையால் பல படங்களில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். ஹீரோவாக மட்டுமின்றி மல்டி ஸ்டாரர் படங்களிலும் அவர் அதிகமாக நடித்து வருகிறார்.


ஜீவா சினிமாவுக்கு நடிக்க வந்து 20 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. அவரது அப்பா தயாரிப்பாளர் என்றாலும் ஜீவா அதிகமாக மற்ற தயாரிப்பாளர் படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

தற்போது ஜீவாவுக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறதாம்.நடிகர் ஜீவாவின் வீடு சென்னை ஈசிஆரில் இருக்கிறது. 10 கோடி ரூபாய் செலவில் தான் 10 வருடங்களுக்கு முன்பு ஜீவா வீட்டை கட்டினார். அதன் மார்க்கெட் மதிப்பு தற்போது இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது.


கார்கள் எனது வீக்னஸ் என ஜீவாவே பேட்டிகளில் கூறி இருக்கிறார். அதனால் அவர் பல சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.பொதுவாக செடான் கார்களை விட SUV ரக கார்கள் வாங்க ஆர்வம் காட்டும் ஜீவா. Chevrolet Captiva, Ford Endeavour போன்ற கார்கள் மட்டுமின்றி மேலும் சில சொகுசு கார்களையும் வைத்திருக்கின்றாராம்.


மேலும் இவர் இறுதியாக சுந்தர்சி.இயக்கத்தில் வெளியான காப்பி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement