• Jul 25 2025

சில உறவுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை- முக்கிய பிரபலத்தை முத்தமிட்ட தளபதி விஜய்- வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. கடந்த மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இப்படம் அமைந்து இருந்ததால் வசூலையும் வாரிக்குவித்தது. 

இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகியது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை நடிகர் விஜய்யும் படக்குழுவினரோடு சேர்ந்து கொண்டாடினார்.


இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்யுடன் ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடம் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் தளபதி விஜய் தன்னை முத்தமிட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதில் சில உறவுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களுடன் இணைந்து பயணித்தது மனதை விட்டு நீங்காத அனுபவம். ஓர் அண்ணாவைப் போல கவனித்துக் கொண்டீர்கள். நம் உறவை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.இவரின் இந்தப் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement