• Jul 25 2025

'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் வந்த சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகளா இது.. இப்படி மாறிட்டாங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில்  வெளியாகும் ஒரு சில படங்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் மறக்க முடியாது. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'சில்லுன்னு ஒரு காதல்'. 2006 இல் வெளியான இப்படத்தில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர்.


இப்படமானது மிகப் பெரிய  ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி ஐசுவாக நடிகை ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். தன் சிறுவயதில்  கூட சுட்டித்தனமாக  நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு  பெற்றவர் .


இவர் தற்போது கதாநாயகி யாகவும்  மற்றும் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முதன்முதலில் தமிழில் 'சில்லுன்னு ஒரு காதல்' என்ற படத்தின் மூலமாகத் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இருப்பினும் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங் களில் தான் அதிகமாக நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது 2010 இல் 'எந்திரன்' படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருப்பார். அதன் பின்னர் மொத்தமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தான் கவனம் செலுத்தி வந்தார். அதன் பிறகு 2012இல் வெளிவந்த 'நீதானே என் பொன் வசந்தம்' என்ற படத்தில் காவியா என்ற  கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 


இதனைத் தொடர்ந்து பிறகு அவர் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது ஹீரோயினாக மாறி உள்ள இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement