• Jul 25 2025

தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் சேர்வதில் முக்கிய பிரச்சனையே இந்த விசயம் தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு அந்த சந்தோஷம் தான் காரணம் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

 தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும்  விரும்புகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ், ஐஸ்வர்யாவின் திருமண நாளான இன்று அந்த அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு  தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்தாலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். தனக்கு பிடித்த அப்பா வீட்டில் மகன்களுடன் இருக்கிறார் ஐஸ்வர்யா.  மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து கெரியரில் பிசியாகிவிட்டார். அது போக ஒர்க்அவுட், சைக்கிளிங் என்று  தனது வாழ்க்கையை சந்தோஷமாக இருக்கிறார்.

கேமராவுக்கு முன்பு நிற்பது தான் தனுஷின் மிகப் பெரிய சந்தோஷமே. மனைவியை பிரிந்த வேதனையை மறக்க அவர் படங்களில் படுபிசியாக இருக்கிறார். அத்தோடு தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதால் தனுஷும் சந்தோஷமாக இருக்கிறார்.

மணவாழ்க்கைக்கு மாற்றாக கெரியரை பார்க்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். மேலும் இப்படி அவரவர் வேலையில் சந்தோஷமாக இருந்தால் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணமே ஏற்படாதே என்பது தான் ரசிகர்களின் கவலையே. தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் ரசிகர்களின் கவலைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement