• Jul 25 2025

ஷிவின் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற முடியாமல் போனதற்கு இது தான் காரணம்- மேடையில் உணர்ச்சி பொங்க பேசிய கமல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக ஷிவின், விக்ரமன், அசீன் மூவரும் கிராண்ட் பினாலே மேடையில் நின்றனர். இதில் ஷிவின் ஜெயிப்பார் என ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். அவருக்கு நல்ல சர்ப்போட்டும் கி்த்து வந்தது.

மேலும் சோசியல் மீடியாவிலும் சிங்கப்பெண் ஷிவினுக்கு என்றே தனி ஆர்மி கூட்டமும் இருந்தது. இதுமட்டுமின்றி பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடையில் கூட கமலஹாசன் மூவரில் யாருக்கு ஆதரவு என்று தனித்தனியாக கேட்டபோது ஷிவின்தான் பலருடைய தேர்வாக இருந்ததால், மக்கள் சாம்பியனாக பார்க்கப்பட்ட ஷிவின் இறுதிக்கட்டத்தில் எலிமினேட் செய்யப்பட்டது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


ஷிவின் ஜெயிக்கணும் என்று நினைத்தால் மட்டும் பத்தாது. அவருக்கு வாக்குகளையும் அளிக்க வேண்டும். அதை மக்கள் செய்ய தவறி விட்டனர். அதனால்தான் ஷிவின் வெளியேற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் ஷிவின் எலிமினேட் ஆனதற்கு காரணம் என்று சொன்னார்.

இருப்பினும் இவருடைய காரணத்தை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ஷிவின் ‘பீப்பிள்ஸ் சாம்பியன்’ என்றும் சோசியல் மீடியாவில் கொண்டாடுகின்றனர்.


மேலும் தவறான தீர்ப்பளித்த பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க விடுகின்றனர். ஷிவின் டைட்டில் வின்னராகாவிட்டாலும் அவருக்கு நிச்சயம் பிக் பாஸுக்கு பிறகு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்த சிவில் மொத்தமாக 21 லட்சத்தை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement