• Jul 27 2025

இது என்ன தனுஷின் வாத்தி படத்திற்கு வந்த நிலமை-குமுறும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பில் ராட்சசன் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர் தான் தனுஷ். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது. அத்தோடு பல தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் சமீபகாலமாக பல பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும் கெரியரில் மிகவும் பிஸியாகவே இருந்து வருகின்றார். இவரது நடிப்பில் உருருவாகியுள்ள நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றது.

மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் தான் வாத்தி. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

நேற்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரின் திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வந்தன. அதன்படி நேற்று வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

அத்தோடு அப்பட தமிழ் டீசருக்கு தற்போது வரை யூடியூப்-1,852,262 மில்லயன் வியூஸ் உடன் 142 K லைக்ஸ் வந்துள்ளது. மேலும் தெலுங்கு டீசருக்கு 1.9 மில்லயன் வியூஸ் உடன் 110 K லைக்ஸ் வந்துள்ளது.

தனுஷ் திரைப்படங்களுக்கு எப்போதும் இல்லாமல் மிகவும் குறைவாகவே இந்த வாத்தி திரைப்படத்திற்கு வியூஸ் வந்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையில் இருக்கின்றனராம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement