• Jul 24 2025

வாரிசு படத்தின் கதை இது தானாம்- இணையத்தில் லீக்கான புதிய அப்டேட்- இதுக்காகத் தான் இந்த டைட்டில் வைத்தார்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மட்டும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


 இப்படியான நிலையில் இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.அதாவது, எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஒரு கட்டத்தில் அவருடைய வளர்ப்பு தந்தை மரணம் அடைந்துவிட அதன் பிறகு அவருடைய அனைத்து பிசினஸ் செய்யும் கவனிக்கும் பொறுப்பு தளபதி விஜய்க்கு வருகிறது.

 கோடிக்கணக்கில் மதிப்புள்ள இந்த பிசினஸை தளபதி விஜய் கவனிக்கும்போது அதில் இருக்கும் எதிர்ப்புகளை மீறி அவர் எப்படி வெற்றி காண்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது.இந்த கதையை பார்த்த ரசிகர்கள் ஓ இதுக்கு தான் வாரிசு என டைட்டில் வைத்தார்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement