• Jul 26 2025

மயோசிடிஸ் நோயிலிருந்து இன்னமும் மீளாத சமந்தா.. உண்மை இதுதானா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அடுத்தடுத்து பல படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய வண்ணம் தான் இருக்கின்றார். இருப்பினும் பல தடைகளை இன்றுவரை தாண்டித் தான் சமந்தா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார்.


அந்தவகையில் விவாகரத்தினைத் தொடர்ந்து கொடிய நோயினால் சமந்தா சமீபகாலமாக பாதிக்கப்பட்டு வருகின்றார். அதாவது கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் எழுந்து கூட நடக்க முடியாமல் தீவிர சிகிச்சையில் இருந்தேன் என்று பல பேட்டிகளில் வருத்ததுடன் தெரிவித்தார்.


பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா தற்போது படங்களில் மீண்டும் பிசியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷனுக்காக பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் சமந்தா.


அதில் அவரிடம் மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு குணமடைந்துவிட்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சம்ந்தா, இன்னும் அந்த நோயில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்றும் முன்பை விட எனது உடல் நிலை நல்ல முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது கூடிய சீக்கிரமே மயோசிடிஸ் நோயின் பிடியில் இருந்து முழுமையாக விடுபடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார். இவர் அந்த நோயிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்ற தகவலானது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement