• Jul 25 2025

விஜே அஞ்சனாவின் மகனா இது!! லைக்ஸினை குவிக்கும் கியூட் புகைப்படம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்படி பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்.



அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே அஞ்சனா. முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த அஞ்சனா பிரபல தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க்கியும் வந்தார்.



தற்போது சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்தும் வழங்கி வருகிறார். கடந்த 2016 நடிகர் கயல் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் 2018ல் ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தையை பெற்றார். அதன்பின்னும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.



தற்போது அவரது மகன் 5 வயதான நிலையில் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். நீங்க ஒரு பையனுக்கு அம்மாவா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement