• Jul 25 2025

அதிரடியாக பதில் சொன்ன செந்தில் .. கண்ணீர் விட்டு அழுத அமுதா... வெறுப்பில் உமா, பழனி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் அமுதாவும் அன்னலட்சுமி.இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் இன்றைய எபிசோடில் HOD PROFESSORரிடம் "ஒருத்தன் பாஸ் பண்ண கூடாதுன்னே நீ கேள்வி கேக்குற, இதே கேள்விக்கு உனக்கு முதல்ல பதில் தெரியுமா அதை சொல்லு, நீ பதில் சொல்லிட்டேன்னா நான் இந்த வேலையை விட்டு போயிடுறேன்" என கேள்வி எழுப்ப புரொபசர் உடனே திருதிருவென முழிக்கிறார்.


இதனையடுத்து HOD அவரிடம் சொல்லிக் குடுக்குற உனக்கே முதலில் தெரியலை, 5 வருஷம் படிச்சி பாஸ் ஆகனும்னு இங்க ஒருத்தன் வந்திருக்கான் அவன் கிட்ட நீ இப்படி தாறுமாறாக கேள்வி கேட்டா என்ன நியாயம், கெடுக்கிற கேள்வியை ஒழுங்கா கேளு என சொல்ல, புரொபசர் வேறு கேள்வியை கேக்க, செந்தில் பதில் சொல்ல அனைவரும் கை தட்ட, உடனே அமுதா ஆனந்த கண்ணீர் விட உமா, பழனி ஆகியோர் உடனே வெறுப்பாகின்றனர்.


மறுபக்கத்தில் ஆஸ்பிட்டலில் இருக்கும் அன்னமிற்கு காயத்தை துடைத்து விட்டு மருந்து வைக்க போக, மாணிக்கம் எங்க அக்காவுக்கு இந்த மருந்து தேவை இல்ல, வேற ஒண்ணு இருக்கு என க் கூறிவிட்டு அமுதாவிற்கு வீடியோ கால் செய்கிறார். அமுதா போனை அட்டெண்ட் செய்து செந்தில் பேசுவதை காட்ட அதைப் பார்த்ததும் உடனே அன்னலட்சுமி மகிழ்ச்சி அடைகிறாள்.

மேலும் அடுத்ததாக HOD செந்திலை கட்டிப் பிடித்தபடி, நீ போய் பேசு, எப்படி படிச்சி பாஸ் பண்ணுனேன்னு, அது மத்தவங்களுக்கு ஒரு encouragement டா இருக்கும் என சொல்ல, செந்தில் இது என்னோட வெற்றி இல்ல, அமுதாவோட வெற்றி அவ பேசுனாத்தான் சரியா இருக்கும் என பெருமையாக சொல்கிறான்.


பின்பு HOD அமுதாவை பேச சொல்ல அமுதா மேடை ஏறி என் புருஷனோட படிப்புல தான் எங்க குடும்பத்தோட ஒட்டுமொத்த கவுரம் அடங்கி இருக்கு.. இவரு எப்படியாவது படிச்சி பாஸ் ஆகனுங்குறதுக்காக வீட்டுல உள்ள பொம்பளைங்க நாங்க கஷ்டப்பட்டோம். இப்படி ஏதோ ஒரு லட்சியத்துக்காக படிக்க வர்றவங்களை தயவு செஞ்சு கொடுமைப்படுத்தாமல் ஊக்கப்படுத்துங்க.

எங்க குடும்பம் மாதிரி வீட்டுல முதன் முறையா படிச்சி பட்டம் வாங்கனும்னு நினைக்கிற எத்தனையோ குடும்பம் உலகத்தில இருக்கு.. அவங்க படிக்க வரும் போது உங்க புத்திசாலிதனத்தை காட்டுறதுக்காக தேவை இல்லாத கேள்வி கேட்டு அவங்கள முடக்கி போட்டுராதீங்க என பேசுகிறாள்.

அதுமட்டுமல்லாது புத்திசாலி மட்டும் தான் பள்ளிக்கூடம், காலேஜ் படிக்க வரனும்னா எதுக்கு பள்ளிக் கூடம், காலேஜ் எல்லாம்.. படிப்பு வராதவங்களுக்கு சொல்லி குடுக்குறதுக்குத் தானே இந்த பள்ளிக் கூடம், காலேஜ் எல்லாம்.. படிப்பு வராதவங்களுக்கு முதலில் படிப்பு சொல்லி குடுங்க என சொல்ல, அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

பிறகு அமுதா செந்திலை சாப்பிட சொல்ல, செந்தில் அமுதாவிடம் சாப்பிடுறதுக்கு முன்னால நீ சொன்ன ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புறேன் நான் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா உம்மா தர்றதா சொன்ன என சொல்ல அமுதா உடனே அவரை பார்க்கிறாள். 

இப்படியான ஒரு நிலையில் இந்த சீரியலில் அடுத்ததாக என்ன நடக்க போவது சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement