• Jul 26 2025

ஆஹா... அருமை! காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த வைரமுத்து.! வைரல் பதிவு இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இன்று உலகம் முழுவதும் இருக்கும் காதலர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அன்பை பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் பலரும் தங்களுடைய காதலர், காதலியுடன் வெளியில் சென்று நேரத்தை செலவு செய்து வருகிறார்கள்.

மேலும் சில  சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு காதலர் தின வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

 

அந்தவகையில் , பிரபல பாடலாசிரியரான வைரமுத்து வழக்கம் போல ஒரு அழகான காதல் கவிதையை பதிவிட்டு தன்னுடைய காதலர் தின வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்..

இது தொடர்பாக வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பது ” எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம் ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல் அந்த முதல் அனுபவம் வாழ்க” என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறாக வைரமுத்து பதிவிட்டுள்ள அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் ஆஹா! அருமை! உயிர்ப்பிப்பதும் உயிர் போக்குவதும், வாழ்த்துவதும், வீழ்த்துவதும், சீராக்குவதும், பிறழவைப்பதும் அதுவே” என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement