• Jul 24 2025

கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் அபியின் வீட்டுக்கு கோபமாகக் கிளம்பிய வெற்றி- இனி நடக்கப் போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.இந்த சீரியலில் வர வர அபயும் வெற்றியும் மோதிக் கொள்வது அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அபி வருணைக் காதலித்து திருமணம் செய்து விட்டதாக எண்ணி கண்மணியை வெற்றி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். கண்மணி வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றார் கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் வெற்றியும் அவரது குடும்பமும் சிக்கி விட்டது.

மேலும் அபி தனக்கும் வெற்றிக்கும் இடையில் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்த பிளான் போடுவதைப் போல கண்மணி பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றார். இதனால் எப்படி கண்மணி பற்றிய ரசகரியம் எல்லாம் வெற்றிக்கு தெரிய வரப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இப்படியான நிலையில் வெற்றியின் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் கோயிலை சூழ்ச்சி செய்து கண்மணி பூட்டி விட்டு அபி மீது பழியைத் துாக்கி போட்டு விட்டார். இதனால் நேராகவே அபியின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement