• Jul 23 2025

விஜய் சேதுபதியின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தை பார்த்து கண் கலங்கிய சீமான்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் மக்கள் செல்வன் "விஜய் சேதுபதி" நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம்  "யாதும் ஊரே யாவரும் கேளிர்".

இலங்கை அகதிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு இலட்சியத்தை நோக்கி செல்லும் அகதி தன்னுடைய வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை கதைக்களமாக இப்படத்தை பார்த்த சீமான் பேட்டி ஒன்றில் கூறியதாவது, இப்படம் மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்ட படம். படத்தில் விஜய் சேதுபதியின் பங்கு பாராட்டப்பட வேண்டியது.

இயக்குநர் பல இடங்களில் அகதிகளின் வாழ்க்கையை பற்றி மிக சிறப்பாக கூறியுள்ளார். இப்படத்தை படமாக பார்க்க முடியாது எனவும் ஒரு சிறந்த கருத்து மக்களை சென்றடையும் என தெரிவித்திருந்தார்.படத்தை பார்க்கும்போது பல முறை கண்கலங்கி விட்டதாகவும் மேலும் இப்படம் ஒரு சிறந்த படைப்பு என கூறியுள்ளார்.

படத்தை தயாரித்த இயக்குநர், தயாரிப்பாளர், படக்குழுவினர் என அனைவருக்கும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து முக்கியமாக விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.


Advertisement

Advertisement