• Jul 24 2025

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்- மோகன்லாலுடன் குத்தாட்டம் போட்ட அக்ஷயகுமார்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் தற்போது  நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மோகன்லால் இது தவிர ரஜனியின் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகின்றார்.


இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஏசியா  நெட் தொலைக்காட்சி சேனல் அதிகாரி கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழா ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் நடிகர் மோகன்லால், அக்ஷய் குமார், கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் மோகன்லால் & அக்ஷய் குமார் இருவரும் இணைந்து பாங்ரா ஸ்டைலில் நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு அக்ஷய் குமார், "என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் இது." என டுவிட் செய்துள்ளார்.


இதற்கு பதில் அளித்த மோகன் லால், "நண்பர் கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழாவில் ஒன் & ஒன்லி நடிகர் அக்ஷய் குமாருடன் நடனம் ஆடிய தருணம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.



Advertisement

Advertisement