• Jul 24 2025

என்னை தாண்டி நடிக்கிறியா நீ- அறிமுக நடிகரின் கன்னத்தில் அறைந்த வடிவேலு- வெளி வந்த ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முண்ணனி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு.  கவுண்டமணி, செந்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு வந்தார் என்றாலும் அதற்கு பிறகு அவருக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்த இவர் அரசியலுக்கு சென்ற காரணத்தினால் சினிமா வாய்ப்பினை இழந்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் முயற்சித்து வந்தாலும் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஒரு படத்தை வடிவேலுவால் நடிக்க முடியவில்லை.தற்பொழுது மாமன்னன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் பொதுவாக பல விமர்சங்களுக்குள் உள்ளாகி வருவதும் உண்டு. குறிப்பாக தன்னுடன் பணிப்புரிந்த சக நடிகர்களே அவரை குறித்து அவதூறாக பேசி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வடிவேலு குறித்து சர்ச்சையான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.


வடிவேலு ஒரு படத்தில் ஏட்டு ஊமத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் பெண் ஒருவரை அவர் பிடிக்க செல்வது போன்ற காமெடி வரும். அந்த காமெடி காட்சி படமாக்கும்போது புதிதாக ஒரு நபர் அதில் இருந்ததை வடிவேலு பார்த்துள்ளார்.

உடனே இயக்குநரிடம் யார் இவர்? என கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர் இவர் புதிதாக வாய்ப்பு தேடி வந்துள்ளார் என கூறியுள்ளார். பிறகு படப்பிடிப்பு நடக்கும்போது அவரை முகத்திலையே அறைந்துள்ளார் வடிவேலு.. என்னை தாண்டி நடிக்கிறியா நீ என கேட்டுள்ளார். இதை படப்பிடிப்பில் நேரில் கண்டதாக செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement