• Jul 25 2025

முதன்முறையாக நயன்தாராவைப் பார்க்க ஆட்டோவில் சென்ற விக்னேஷ் சிவன்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தார்கள்

கடந்த ஆண்டு இதே நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க நயன்தாரா திருமணம் நடைபெற்றது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் விக்னேஷ் சிவன் இரட்டை பிள்ளைகளான உயிர், உலக் மற்றும் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே. இந்த ஓராண்டில் நிறைய நடந்திருக்கிறது. எதிர்பாராத சோதனைகள். ஆனால் என்னை விரும்பும் குடும்பத்தார் இருக்கும்போது மீண்டும் நம்பிக்கை வருகிறது என்றார். மேலும் தன் குடும்பமே தனக்கு பக்கபலம் என பெருமையாக தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நயன்தாராவை முதன் முதலாக எப்படி சந்தித்தார் என்பது குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதாவது நானும் ரௌடி தான் படத்தின் கதை சொல்வதற்காக விக்னேஷ் சிவன் நயன்தாராவைப் பார்க்க ஆட்டோவில் தான் சென்றாராம்.


பின்னர் நயன்தாராவுக்கு ஒன்றரை மணி நேரம் கதை சொல்ல அவருக்கு கிறீன் டீயும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு கிறீன் டீ என்றால் பிடிக்காதாம். நயன்தாரா கொடுத்திட்டாங்க என்று குடித்தாராம்.மேலும் இவர் கதை சொல்ல போகும் போதே எப்படியும் இந்த படத்தில் நடிக்கிறதுக்கு நோ தான் சொல்லப்போறாங்க எதுக்கும் சும்மா பார்த்திட்டு வந்திரலாம் என்று தான் போகும் போது தன்னுடைய பிரண்ட் கிட்ட சொல்லிட்டு போயிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement