• Jul 25 2025

அவர் இல்லாத உலகில் என்னால் வாழ முடியாது.. அன்றே கணித்த வாணி ஜெயராம்.. கண் கலங்கும் ரசிகர்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

1971ஆம் ஆண்டு வெளிவந்த 'குட்டி' (GUDDI) என்கிற பாலிவுட் திரைப்படத்தில் வசந்த் தேசாயின் இசையில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'மியான் மல்ஹார்' ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவரே இசையரசி வாணி ஜெயராம். 


இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் இவர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை தன்னுடைய காந்தக் குரலின் மூலம் பாடி அசத்தி உள்ளார். அதிலும் குறிப்பாக "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.." என்ற இவரின் பாடல் இன்றும் நம்மால் மறக்க முடியாது. 


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இன்றுவரை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்தவர் வாணி ஜெயராம். இவர் திரையுலகில் பிரபலமானவராக இருந்தாலும் கணவர் ஜெயராம் இல்லாமல் ஒரு நாளும் வாணி ஜெயராம் வெளியே செல்ல மாட்டார். அந்தளவிற்கு அவர் மீது தீராத காதல் கொண்டவர். 


இவர்கள் இருவரதும் அன்பைப் பார்த்து வியந்த ரசிகர்களோ ஏராளம். இவ்வாறு தீராக் காதலில் மிதந்து வந்த இவர்கள் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அந்நியோன்னியமாக இருந்த இவர்களது வாழ்க்கையில் 2018 ஆம் ஆண்டு புயல் வீசியது.

ஆம் அப்போது தான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது கணவரை இழந்தார் வாணி ஜெயராம். கணவரின் மரணத்திற்குப் பின்னர் பேட்டியளித்து இருந்த வாணி ஜெயராம், ''கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ ரொம்பவே கஷ்டப்படுகிறேன். அவர் இல்லாத உலகில் வாழ எனக்கு தெம்பு இல்லை'' என்று ஓப்பனாக குறிப்பிட்டு இருந்தார்.


இதனைத் தொடர்ந்து இவர் இன்றைய தினம் அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றி விட்டு தனது கணவன் இருக்கும் அதே இடத்திற்கு சென்று விட்டார். இருந்தாலும் வாணி ஜெயராமின் இந்த திடீர் இழப்பு நம்மால் ஜீரணிக்க முடியாத ஒன்று தான். 

Advertisement

Advertisement