• Jul 25 2025

ஏட்டிக்குப் போட்டியாக மாறிய ரோஜா சீரியல் ஜோடி.. இறுதியில் ஜெயிக்கப் போவது யார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட சீரியல் என்றால் அது 'ரோஜா' சீரியல் தான். இந்த சீரியலுக்கு ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.


அந்தவகையில் மதிய வேளையில் ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த சீரியலானது அதன் பிறகு மக்கள் மத்தியில் கிடைத்த பலத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது.


இந்த சீரியலினைப் போலவே இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இந்த சீரியலானது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இதில் நாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி என்பவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'சீதாராமன்' என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.


அதேபோன்று 'ரோஜா' சீரியலின் நாயகனான சிப்பு சூரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'பாரதி கண்ணம்மா' சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர்களின் புதிய சீரியல் ப்ரோமோ வீடியோக்கள் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகின.


அதில் பிரியங்கா நல்காரி நடிக்கும் சீதாராமன் ப்ரோமோ வீடியோ youtube டிரெண்டிங்கில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சிப்பு சூரியன் நடிக்கும் பாரதிகண்ணம்மா சீசன் 2 சீரியல் ப்ரோமோ ஆனது ட்ரெண்டிங்கில் 26 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Advertisement