• Jul 26 2025

வனிதா பிக்பாஸில் இருக்கும் போதே ராபர்ட்க்கு கல்யாணம் நடந்துச்சு-வெளியான பல உண்மைகள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.அத்தோடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஔஜபரப்பான பிக்பாஸ் சீசன்-6 ஜயும் அவரே தொகுத்து வழஙடகி வரும் நிலையில் இந்த சீசனில் தற்போது 6பேர் வெளியேறி 15 போட்டியாளர்கள் உள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சி பற்றி நடிகை வனிதா ஷகிலாவுடனான நேர்காணலில் நிறைய விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது வனிதா கூறுகையில்....


 “நான் பிக் பாஸில் இருக்கும் போது ராபர்ட் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்யும் பொழுது அவருடைய மனைவிக்கு ஒரு குழந்தை இருந்தது. நான் வெளியே வந்த பிறகு, இது பற்றி என்னிடம் கேட்டார்கள். ராபர்ட் மற்றும் அவருடைய மனைவி என்னை பற்றி பேசி இருந்தது குறித்தும் என்னிடம் கேட்டிருந்தார்கள். ராபர்ட்டோ இன்னும் தப்பாக பேசி இருந்தார் என்று சில நெருக்கமான, அக்கறை கொண்டவர்கள்  தெரிவித்து இருந்தார்.

அதன் பின்னர்  ஒரு திரைப்படத்தில் நடிப்பது குறித்து ராபர்ட் என்னிடம் பேச, நான் நடிக்கிறேன் என்று  கூறினேன். இதைத் தொடர்ந்துதான் பிக் பாஸில் அவர் கலந்து கொள்வது குறித்து என்னிடம் கேட்டார். நல்ல விஷயம் தான்... உனக்கு திறமை இருக்கிறது.. சரியான தளம் அமையவில்லை. இதை பயன்படுத்திக் கொள் என்றேன். அப்போது உன்னால் இது விஷயமாக பேச முடியுமா என்று என்னை ராபர்ட் கேட்டார். நிச்சயமாக என்று கூறி  விஜய் டிவி பிரதீப்பிடம்  திருமணத்தில் சந்தித்து நான் பேசினேன். அவரே ஒரு நிமிடம் குழம்பி நின்றார். நான் ராபர்ட்டுக்காக பேசுகிறேனா என்று ..



மேலும் அப்படி எல்லாம் பேசி இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் சென்று இருக்கிறார். அப்பொழுதும் நான் கேட்டேன், நீ வெளியில் இப்படி பேசி வைத்திருக்கிறாய்.. உள்ளே சென்றால் உன் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட பல கேள்விகள் எழும். நீ எப்படி பேசுவாய்? சமாளிப்பாய்? என்று கேட்டிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு அவர் பண்ணுவது மிகவும் அவமானமாக இருக்கிறது. 


பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு? கமல் சார் இதை பலமுறை கூறி நினைவுபடுத்துகிறார். எனக்கெல்லாம் பிக்பாஸ் மிகப்பெரிய வாய்ப்பு. அதன் மதிப்பும் எனக்கு தெரியும். அத்தோடு என்னுடைய வாழ்க்கையை பிக் பாஸ் மிகவும் மாற்றியது. அப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்குத்தானே கெடுதல் செய்து கொள்கிறார்.மேலும் இதை பார்ப்பவர்கள் எனக்கு நானே சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டதாக கூறுகின்றனர்” என்று கூறி சிரித்தார்.


Advertisement

Advertisement