• Jul 25 2025

USAவில் படு மாஸாக நடந்து வரும் ப்ரீமியர் புக்கிங்... முன்னிலையில் இருப்பது வாரிசா..? துணிவா..? வெளியானது விபரம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. மேலும் இவர்கள் இருவரும் சினிமாவின் ஆரம்பகாலத்தில் இருந்து நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர்களின் நடிப்பில் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் வாரிசு பட தமிழக உரிமையை சில இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பெற துணிவு படத்தை தமிழகத்தில் மொத்தமாக இவர்களே வாங்கிவிட்டார்கள்.


இதன் காரணமாகத் தான் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளும், வாரிசு படத்திற்கு கொஞ்சம் குறைவான திரையரங்குகளும் கிடைத்ததாக கூறப்பட்டன. அந்தவகையில் சமீபத்தில் அஜித்தின் வாரிசு திரைப்படத்தின் துணிவு பட டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. 


இவ்வாறாக இரண்டு படங்களும் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் USAவில் ப்ரீமியர் புக்கிங் படு மாஸாக நடக்கிறது. அதாவது இதுவரை இரண்டு படங்களும் புக்கிங் ஆன விவரம் வெளியாகியுள்ளது, அதில் விஜய்யின் வாரிசு படம் அதிகம் புக் ஆகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement