• Jul 25 2025

காதலை ஏற்க மறுக்கும் வெண்ணிலா... சூர்யா எடுத்த அதிரடி முடிவு... பரபரப்பு திருப்பங்களுடன் 'காற்றுக்கென்ன வேலி'...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல். இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவின் முகத்திற்கு நேராக தனியாக சென்ற சூர்யா "உனக்கு என் மேல காதல் இல்லை என்று இப்ப சொல்லு, நான் போய்டுறேன்" எனக் கூறுகின்றார். ஆனால் வெண்ணிலாவோ பதில் எதுவும் சொல்லாமல் செல்கின்றார்.


அதற்கு சூர்யா "ஏன் பதில் எதுவும் சொல்லாமல் போய்ட்டு இருக்காய், இல்லை என்று சொல்ல வேண்டியது தானே, அது ஏன் சொல்ல வரமாட்டேங்குது" எனக் கேட்கின்றார். பின்னர் "நான் உன் மேல் வைச்சிருக்கிறது வெறும் காதல் இல்ல வெண்ணிலா, இதைப் பார்த்தும் உன் மனசு இரங்கல என்றால் அதற்கு அப்புறமாக நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன் வெண்ணிலா" வெண்ணிலாவிடம் ஒரு டயரியை கொடுக்கின்றார். அத்தோடு "கடைசி செக்கன் வரைக்கும் உனக்காக காத்திட்டு இருப்பேன்" என கூறி அந்த இடத்தை விட்டு நகர்கிறார் சூர்யா.


Advertisement

Advertisement