• Jul 26 2025

கை எடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்ட கோதை- நக்கலாக சிரித்த தமிழ்- அவமானத்தில் தலை குனிந்த அர்ஜுன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதி உண்மையைக் கண்டு பிடிப்பதற்காக தங்களுடைய கம்பனியில் வேலை செய்யும் ஒருவரின் வீட்டுக்க சென்ற போது அவரின் மனைவியும் மகளும் உண்மையைச் சொல்லி விடுகின்றனர். இதனால் ரஸ்வதி வந்து தமிழிடம் உண்மையைச் சொல்லி விட தமிழ் அந்த நபரைக் கூப்பிட்டு அடிக்கின்றார்.இதனால் அவர் பயந்து போய் உண்மை அனைத்தையும் சொல்லி விடுகின்றார்.


பின்னர் தமிழ் தனக்கு ஆடர் தந்த உமாபதியிடம் அந்த தொழிலாளியையும் கூட்டிச் சென்று உண்மையை உடைத்து விடுகின்றார். அதனால் அதிர்ச்சியடைந்த உமாபதி தமிழின் நேர்மையைப் பாராட்டியதோடு கோதை கம்பனிக்கு எல்லோருமாகக் செல்கின்றனர்.

அப்போது சரஸ்வதி கம்பனி வளரக் கூடாது என்பதற்காக அர்ஜுனும் கார்த்தியும் இணைந்து செய்த வேலையை சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார்.மேலும் சரஸ்வதி இன்னும் நாங்க மூன்று கம்பனியை வாங்குவதாக இருந்தொமு் அவங்களுக்கும் அர்ஜுன் போன் பண்ணி தப்பு தப்பான சொன்ன விஷயத்தை போட்டு உடைகின்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த கோதை அர்ஜுனையும் கார்த்திக்கையும் திட்டுகின்றார். அத்தோடு தமிழ் முன்னாடியே உமாபதியிடம் கை எடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்கின்றார். அப்போது உமாபதி கோதை அம்மா உங்களைப் போல நேர்மை தமிழ் கிட்ட மட்டும் தான் இருக்கு என்று சொல்ல தமிழ் நக்கலாக இருக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement