• Jul 24 2025

தனுஷிடம் ஒரு லட்சம் பணத்தை கடனாக வாங்கிய வெற்றி மாறன்- நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார்.இப்படத்தில் சூரி,விஜய்சேதுபதி, சேத்தன்,கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த செய்யாறு பாலு, வெற்றிமாறன் குறித்து பல விஷயங்களை பேசினார்.அதில், சிறுகதைகளை வைத்து படத்தை இயக்குவதில் திறமையானவர் வெற்றிமாறன். ஏற்கனவே மக்கள் படித்த கதை என்பதால், அதில் சுவாரசியம் குறையாமல் கதையை எடுத்து செல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். இந்திய சினிமாவில் ஒரு முக்கியமாக இயக்குநராக வெற்றிமாறன் இருப்பதற்கு காரணம் அடிப்படையில் அவர் ஒரு புத்தகவாசிப்பாளராக இருப்பது தான்.


அதே போல வெற்றிமாறன் தனுஷ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருப்பதால், இருவரும் கூட்டணியும் வெற்றி பெறுகிறது. இவை அனைத்தையும் தாண்டி தனுஷூடனான நட்பை பற்றி வெற்றிமாறன் ஒருபேட்டியில் கூறியிருந்தார். இதில், பொல்லாதவன் படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது தான் எனக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

அப்போது, எனக்கு பணம் தேவைபட்டது. யாருடன் பணத்தை கேட்பது என்று தெரியாமல் இருந்த போது, தனுஷிடம் கடனாக ஒரு லட்சம் கேட்டேன் தயக்கமே இல்லாமல் கொடுத்து உதவினார். அந்த நேரத்தில் தனுஷ் சாதாரண நடிகராகத்தான் இருந்தார். அப்போது அவர் செய்த உதவியால் ஏற்பட்ட பிணைப்பு மற்றும் நம்பிக்கையால் தனுஷ் கூட தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறார்.

விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஜூனியர் என்டிஆரை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், எனக்கு எதாவது ஒரு ரோல் கொடுங்க என்று தனுஷ் வெற்றிமாறனிடம் கேட்டு இருக்கிறார். வெற்றிமாறனை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதில் தனுஷ் தெளிவாக இருக்கிறார் என்று செய்யாறு பாலு  பேட்டியில் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement