• Jul 25 2025

வாந்தி எடுத்த சீதா... காரணம் யாரு... தப்பை ஒத்துக் கொண்ட ராம்.. அதிர்ச்சியில் மகாலட்சுமி.. அட்டகாசமான ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'சீதா ராமன்'. இந்த சீரியலானது நகைச்சுவை, அழுகை, சிரிப்பு என்பவற்றுக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சீதா வாந்தி எடுக்கின்றார். அதனைப் பார்த்ததும் மகாலட்சுமி அதிர்ச்சி அடைகின்றார். மேலும் எதுக்கு வாந்தி எடுத்தாய் என சீதாவிடம் கேட்கின்றார்.


அதற்கு சீதா "மிஸ்டர் ராமிடம் கேளுங்க, அவர் தானே காரணம்" என்கிறார். பின்னர் ராம் "சீதா என்ன ஆச்சு" எனக் கேட்கின்றார். சீதாவோ "அன்னைக்கு நைட் நான் வேணாம் வேணாம் என்று சொல்லியும் நீங்க கேட்கல தானே" என்கிறார். 


பின்னர் ராமிற்கு அன்று குல்பி ஐஸ் குடித்தது ஞாபகம் வருகின்றது. "நான் தான் தப்புப் பண்ணிட்டேன்" என்கிறார் ராம். அதற்கு மகாலட்சுமி "என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டு இருக்கிறாய்" என அதிர்ச்சியுடன் கேட்கின்றார். ராமோ பார்த்தவுடன் கொஞ்சம் எமோஷனலாகிட்டேன் எனப் பதிலளிக்கின்றார். மகாலட்சுமி கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement