• Jul 23 2025

வெற்றிமாறன் ஓர் மிருகம்.. சீமானின் பேச்சால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. மேலும் இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலை படம்  ஆரம்பமாகும் போதே இது எந்த கதையின் தழுவலும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் சூரி, குமரேசன் என்ற கேரக்டரில் படம் முழுக்க அதிரடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப் படத்தின் ஆரம்பக்காட்சியான ரயில் விபத்து காட்சியிலேயே அதிரடியாக ஸ்கோர் செய்துவிட்டார் வேல்ராஜ்.

வசூலை அள்ளி வரும் விடுதலை படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், விடுதலை படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார். அத்தோடு இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில்  டிராண்டானது.

இவ்வாறுஇருக்கையில் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். அதில், பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் திரையுலகில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் இருந்தனர். அந்த வரிசையில் ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் சிறந்த படங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றனர். உலகப்படம் ,ஆங்கிலப்படம் என்று சொல்லுவோம் அதை மீஞ்சும் வகையில் நம்மிடத்திலும் ஆள் உள்ளது.

 படம் பார்த்த எல்லாருக்கும் இப்படி ஒரு உழைப்பை கொடுக்க முடியுமா என்று தான் நினைக்கத்தோன்றும், யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு படத்தை கொடுத்து உள்ளார். அசுரன் படம் பார்த்துவிட்டு திகைத்து போனோம். அத்தோடு இந்த படம் பத்து மடங்கு அசுரனுக்கு சமமான படமாக உள்ளது, விடுதலை போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க கடும் உழைப்பை கொட்ட வேண்டும். அதனை வெற்றிமாறன் செய்துள்ளார். காட்டுக்குள் பயணித்து மலை ஏறி கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். மனித வடிவில் இருக்கும் மிருகம் வெற்றிமாறன். அதனால் தான் அதே வெறியில் படத்தை எடுத்திருக்கிறார் என்று சீமான் அவரை வெகுவாக பாராட்டி பேசி இருந்தார்.

Advertisement

Advertisement