• Jul 24 2025

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..! பிக் பாஸ் கேப்ரில்லாக்கு திருமணம் முடிஞ்சுட்டா? ஷாக்கான ரசிகர்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான கலந்து கொண்டவர் சீரியல் நடிகை கேப்ரியல்லா.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்று “ஈரமான ரோஜாவே”. இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இதில் கேப்ரியல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேப்ரியல்லா ஜீவா மற்றும் காவ்யா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், கேப்ரியல்லா திருமண காட்சியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

மேலும் மாப்பிள்ளையின் புகைப்படங்கள் மற்றும் செம ஆட்டம் காட்டும் ரீல் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பதிவில் “ஈரமான ரோஜாவே”திருமணக் காட்சியிலும் செம ட்விஸ்ட் இடம் பெற்றுள்ளது.

கேப்ரியேலாவின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேப்ரியல்லாவின் உண்மையான திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement