• Jul 25 2025

கறுப்பு நிற இட்லி சாப்பிடும் வில்லன் நடிகர்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்து பின்னர் யூ-டியூப் பிரபலமாக மாறி இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி. சமீபகாலமாகவே பயணம் மற்றும் உணவுகள் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை திறம்பட விவரித்துக் கொண்டிருக்கிறார்.


அந்தவகையில் சிறு சிறு கிராமங்கள், சாலை ஓரக்க்கடைகள், சிறிய கடைகளில் கிடைக்கும் வித்யாசமான, சுவையான உணவுகளை தேடி தேடி சென்று அதனை ருசித்து தனது ரசிகர்களுக்கு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


பொதுவாக நாம் வெள்ளை நிறத்தில் இட்லி சாப்பிட்டிருப்போம். ஆனால் கறுப்பு நிறத்தில் என்றாவது இட்லி சாப்பிட்டிருக்கிறோமா? இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் கறுப்பு இட்லி சாப்பிட்டு காண்பிக்கிறார்.  


உலகில் யாருமே அதிகம் கேள்விப்பட்டிடாத மற்றும் பார்த்திடாத இந்த கறுப்பு இட்லி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு மூன்று நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். 60 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement