• Jul 25 2025

நயன்தாரா கொஞ்சம் டெரர்தான் என பயந்து ஒதுங்கிய பிரபல நடிகை- விக்னேஷ் சிவன் சொன்ன உண்மைத் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் ஜுன் மாதம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் வந்திருந்தனர். திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் எதிலும் பிரச்சினைகளை சந்திக்கும் நயனுக்கு வாடகை தாய் விவகாரமும் பிரச்னையை கிளப்பியது. இருப்பினும் அவர்கள் எந்த விதியையும் மீறவில்லை; 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என தெரியவந்ததை அடுத்து அந்த விவகாரம் ஓய்ந்தது. ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும், மற்றொரு மகனுக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


இந்தச் சூழலில் நயன்தாராவை பார்த்து ராதிகா மிரண்டு போன சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரத்திற்கு மீனா குமாரி என்று பெயர் வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். அதற்கு காரணம் விக்னேஷ் சிவனின் தாயார் பெயர் மீனா குமாரி. ஒருமுறை ஷுட்டிங் ஸ்பாட்டில் நயன் தாரா சைலென்ஸ் என்று ரொம்பவே சத்தமாக கத்திவிட்டாராம். அவர் சவுண்டை கேட்டு ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் கப் சிப் என்று ஆனதாம்.


 இதை கவனித்துக்கொண்டிருந்த ராதிகா, ஒருமுறை நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினியை சந்தித்திருக்கிறார். அப்போது நானும் ரௌடிதான் பட அனுபவங்களை கூறியிருக்கிறார். அந்த சமயத்தில், நானே ஷூட்டிங் ஸ்பாட்டில் டெரராகத்தான் இருப்பேன். ஆனால் இந்தப் பொண்ணு நயன்தாரா என்னைவிட ரொம்ப டெரரா இருப்பா போல.


 சைலென்ஸ்ங்றதையே அவ்ளோ சத்தமா சொல்றார்" என தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை விக்னேஷ் சிவன் சுஹாசினிக்கு அளித்த பேட்டியின்போது சுஹாசினி கூறினார். அதனையடுத்து நயன் தாரா கொஞ்சம் டெரர்தான் என விக்னேஷ் சிவனும் அந்தப் பேட்டியில் ஒத்துக்கொள்ளவும் செய்தார்.


Advertisement

Advertisement